முத்தை முரளிதரன் அப்போலோவில் அனுமதி – என்ன பிரச்னை அவருக்கு?

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நேற்று இரவு திடீரென அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு இந்தியா- இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது இலங்கை அணியில் விளையாடிய முத்தையா முரளிதரன் தனது ஓய்வை அறிவித்தார். அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டியிலும் ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் 1155 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடினார். பின்னர் ஓய்வை அறிவித்த அவர் பின்னர் பந்துவீச்சு பயிற்சியாளராக மாறினார்.இவர் தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உடனடியாக நேற்று இரவு ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவர் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “49 வயதாகும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் முத்தையா இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெற்றிகரமாக ஆஞ்ஜியோ செய்யப்பட்டு ஆஞ்ஜியோ பிளாஸ்ட் மூலம் ஸ்டென்ட் பொறுத்தப்பட்டது.

மூத்த இருதய சிகிச்சை நிபுணர் செங்கூட்டுவேலன் மூலம் அளிக்கப்பட்ட சிகிச்சையில் நலம் பெற்ற முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி அவர் தனது இயல்பான பணியினை தொடரலாம்”.இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது 49 வது பிறந்தநாளை முத்தையா முரளிதரன் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>