ஐபேக் நடத்திய எக்ஸிட்போல் ஸ்டாலினுக்கு ஷாக் – திமுக கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை?
திமுக எத்தனை தொகுதியில் வெற்றி பெறும் என்பது குறித்து ஐபேக் நிறுவனம் சார்பில் எக்ஸிட் போல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மே 2ம் தேதிக்காக தமிழகமே காத்துக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆட்சி யார் கையில் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும். வாக்குப் பதிவுகளுக்கு பிந்தைய கணிப்பான எக்சிட் போல் எனப்படும் முடிவுகளை வெளியிட ஏப்ரல் 29 வரை தடை இருப்பதால் முன்னணி செய்தி நிறுவனங்களுக்காக காத்திருக்காமல், ஐபேக் களமிறங்கியுள்ளது. எக்சிட் போல் விஷயத்தில் ஐபேக் தனது அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளது.
இது தொடர்பாக திமுக வட்டாரங்களில், ``2011, 2016 சட்டமன்றத் தேர்தலிலும்,2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒவ்வொரு பூத்திலும் எவ்வளவு ஓட்டு பதிவாகியிருக்கிறது, யார் யாருக்கு எத்தனை ஓட்டுகள் பதிவாகியிருக்கிறது என்பதை சேகரித்துக்கொண்டோம். இந்த முறை திமுகவின் பூத் ஏஜென்டுகளில் ஐபேக் சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டவர்களும் உள்ளே சென்று அமர்ந்திருந்தார். ஏற்கனவே இருக்கும் டேட்டாக்களின் அடிப்படையில்... அந்தந்த வாக்குச் சாவடியைச் சேர்ந்த அவர் ஏற்கனவே திமுகவுக்கு சாதகமான வாக்காளர்கள் வந்துவிட்டார்களா, அவர்களின் வாக்குப் பதிவாகிவிட்டதா என்பதை கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வெளியே வந்து...வெளியே ஐபேக் சார்பில் பணியாற்றும் இன்னொருவரிடமும் விவரங்களைச் சொல்லுவார். அதன் அடிப்படையில் திமுகவுக்கு சாதகமான வாக்குகளை பூத்துக்குள் கொண்டு செல்லும் பணிகளை வெளியே இருக்கும் திமுகவினர் செய்தார்கள்.
கடந்த வாரம் வரை நடத்திய ஆய்வுகளுக்குப் பின் ஐபேக் நடத்திய எக்சிட் போல் முடிவில் திமுக கூட்டணிக்கு 205 இடங்கள் கிடைக்கும் என்று திமுக தலைவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதிமுகவின் அமைச்சர்கள் முக்கிய தொகுதிகளில் மண்ணை கவ்வுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆட்சிக்கு பிறகு எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவுகள் குறித்து கொடைக்கானல் சென்று எதிர்கால வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.