IPL கிரிக்கெட் தொடரில் சென்னை அணி 2 வது வெற்றி
IPL கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.
14 வது IPL கிரிக்கெட் தொடரில் 12 வது லீக் ஆட்டம் நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் அணியும் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தார்.
சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பவுண்டரியுடன் ரன் கணக்கை ஆரம்பித்த சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. ருதுராஜ் 10 ரன்னில் வெளியேறினார். பாப் பிளிஸ்சிஸ் ஒரே ஓவரில் 33 ரன்களில் வெளியேறினார். மொயீன் அலி 26 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 18 ரன்களிலும்
சென்னை அணிக்காக கேப்டனாக ஆடிய 200 வது ஆட்டத்திலும் டோனியின் தடுமாற்றம் வெளிப்பட்டது. அவர் 17 பந்தில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இறுதிகட்டத்தில் வெய்ன் பிராவோவின் அதிரடியால் ஸ்கோர் 180ஐ கடந்தது.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது.
அடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்களின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.
20 ஓவர்களில் ராஜஸ்தானால் 9 விக்கெட்டுக்கு 143 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பதிவு செய்தது.