மலையாளம், தமிழைத் தொடர்ந்து தெலுங்கு படத்தில் நஸ்ரியா

நடிகை நஸ்ரியா தனது முதல் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

2006 ஆண்டு பள்ளி பருவத்தில், பளிங்கு மலையாள திரைப்படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் நஸ்ரியா. 2013-ல் நாயகியானார். தொடர்ந்து அல்போன்ஸ்புத்திரனின் நேரம், அட்லீயின் ராஜா ராணி, நையாண்டி, ஓம் சாந்தி ஓசன்னா (மலையாளம்), வாயை மூடிப் பேசவும் ஆகியப் படங்கள் அவரை முன்னணி நட்சத்திரமாக்கியது. 2014-ல் வெளியான பெங்களூரு டேஸ், திருமணம் என்கிற நிக்ஹா படங்களுடன் மலையாள நடிகர், பகத் பாசிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார்.

நான்கு வருடங்கள் கழித்து 2018-ல் அஞ்சலி மேனன் இயக்கிய கூடே படத்தில் மீண்டும் நஸ்ரியா நடித்தார். பிறகு பகத் நடித்த ட்ரான்ஸ் படத்தில் நடித்தார்.

இந்நிலையில், நானி நடிப்பில், விவேக் ஆத்ரேயா இயக்கும் தெலுங்குப் படத்தில் நஸ்ரியா நடிக்க ஒப்புக் கொண்டார். இது அவரது முதல் தெலுங்கு திரைப்படம். நேற்று அதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

ஆன்டி சுந்தரினிகி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். ரொமான்டிக் காமெடியாக இப்படம் தயாராகிறது. "என்னுடைய முதல் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். முதலாவது எப்போதும் ஸ்பெஷல். அதனால் இந்தப் படமும் எனக்கு ஸ்பெஷல்" என ட்வீட் செய்துள்ளார் நஸ்ரியா.

More News >>