கொரோனா முடியும் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோன பிரச்னை முடிவுக்கு வரும் வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, உலக அளவில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்னர் தெரிவித்தது.

ஆனால், தற்போது ஆம்னி பேருந்துகளை பகலிலும் இயக்கப்போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். பயணத்தை முன்கூட்டிய திட்டமிட்டவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் எனவும் பயணிகள் சிரமத்திற்கு மன்னித்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இழப்பை சரி கட்ட முடியாததால் நிறுத்தம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுபாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, ஆம்னி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>