பட வாய்ப்புக்காக இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார் - பிரபல நடிகை பகீர் புகார்..!
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் ஏற்கனவே மீ டூவில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினர். புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. பல முன்னணி இயக்குனர்கள் மீ டூ புகாரில் சிக்கினர்.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை பிராச்சி தேசாயும் மீ டூ புகார் கூறியுள்ளார். இவர் இந்தியில் ராக் ஆன், லைப் பார்ட்னர், தேரி மேரி கஹானி, போலீஸ் ஹேல், ஏக் வில்லன், கார்பன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பிராச்சி தேசாய் கூறும்போது ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் இயக்குனர் நேரடியாகவே அவரது விருப்பத்துக்கு இணங்கும்படி அழைத்தார்.
படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன். படுக்கைக்கு நான் ஒப்புக்கொண்டு இருந்தால் இன்னும் நிறைய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்து இருக்கும். அப்படி நடிக்க தேவை இல்லை. பெரிய படத்தின் இயக்குனர் அழைத்துமே ஒப்புக்கொள்ளவில்லை. குறைவான படங்களில் நடித்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன் என்றார்.