`மினி ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு.. CRISIL அறிக்கை சொல்வது என்ன?!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, உலக அளவில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று மட்டும் 11 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது கொரோனா பாதிப்பு. பல மாநிலங்களின் நிலையும் இது தான்.

இதனால், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதேபோல் டெல்லியில் 7 நாட்கள் ஊரடங்கு என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருக்கிறது. இன்னும் பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்படும் போலத் தெரிகிறது. இதற்கிடையே, இந்த மினி ஊரடங்கு காரணமாக, பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக இந்தியாவைச் சேர்ந்த தரநிலை - பகுப்பாய்வு நிறுவனமான க்ரைசில் (CRISIL) அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

அதில், ``ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுளளதால் பொருளாதார நடவடிக்கைகளை கண்காணிக்க உதவும் பிரதான காரணிகளான மின் நுகர்வு மற்றும் ஜிஎஸ்டி இ-வே பில்களில் லேசான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தற்காலிகமா அல்லது தொடருமா என்பது இனிமேல் தான் தெரியும்” என CRISIL தெரிவித்துள்ளது.

More News >>