நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கர் கசிவால் 22 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2023 பேர் உயிரந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மகராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாசிக்கில் உள்ள ஜாகீர் ஹூசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு டேங்கரில் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த டேக்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த மருத்துவமனையில் இன்று டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு சிலிண்டர்களுக்கு மாற்றப்படும் போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டது. டேங்கரில் இருந்த ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. இதனால், அந்த மருத்துவமனையை சுற்றியும் ஆக்சிஜன் வாயு புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த வாயுக்கசிவில் 11 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மூச்சுத்திணணுல் ஏற்பட்டவர்கள் அதே மருத்துவமனையிலும், அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்து குறித்து மாநில சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் டேங்களில் இருந்து வெளியான ஆக்சிஜன் வாயு கசிவை போராடி கட்டுப்படுத்தினர். டேங்கரின் வாழ்வில் ஏற்பட்ட பழுது காரணமாக கசிவு ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

More News >>