கிரிக்கெட்டை விட்டு கட்டட வேலையில் இறங்கிய டேவிட் வார்னர்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓராண்டு தடை விதிப்பிற்கு பிறகு, ஓய்வில் இருக்கும் ஆஸ்திரேலியா அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தனது வீட்டின் கட்டுமான பணியில் இறங்கியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து டேவிட் வார்னர் கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார். சிட்னி நகரில் 10 மில்லியன் டாலர் செலவில் வார்னர் வீடு கட்டி வருகிறார். வீட்டின் கட்டுமான பணிகளைப் பணியாளர்களுடன் இணைந்து வார்னர் செய்து வருகிறார்.
வார்னரின் குழந்தைகளும் கட்டுமான பணிகளில் உதவிசெய்கின்றனர். வார்னரின் மனைவி கேண்டிஸ் கட்டுமான பணிகள் செய்யும் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களைச் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com