4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
பார்ப்பதற்கு அண்ணன், தப்பி போல் காட்சியளிக்கும் விக்ரம், துருவ் விக்ரமின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். துருவ் விக்ரம் ஏற்கனவே தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் கதாநாயனாக அறிமுகமானார்.
விக்ரமும் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், தற்காலிகமாக 'சீயான் 60' என அழைக்கப்பட்டு வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். துருவுக்கு விக்ரம் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இருவரும் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதிநடிகர் விவேக் மறைந்ததால், நடிகர் விக்ரம் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடவில்லை. இந்நிலையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து பகிர்ந்து, புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அண்ணன், தப்பிபோல் காட்சியளிக்கும் இந்த புகைப்படம் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.