காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும்.ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:-சிக்கன் -அரை கிலோவெங்காயம்-1இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்உப்பு-தேவையான அளவுபச்சை மிளகாய்-3தனியா தூள்-2 ஸ்பூன்மஞ்சள் தூள் -1ஸ்பூன்எண்ணெய்-தேவையான அளவுகொத்தமல்லி -சிறிதளவுமசாலா பொருள்கள்:- பட்டை ஏலக்காய் கிராம்பு
செய்முறை:-முதலில் சிக்கனுக்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளவும். சிக்கனை நன்கு தண்ணீரில் அலசி சிறிது துண்டுகளாக பிரித்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கன் எடுத்து கொண்டு அதில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், நறுக்கிய வெங்காயம், தக்காளி, போன்ற பொருள்களை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கியவுடன் மசாலாவில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். சிக்கனில் தண்ணீர் வற்றியவுடன் கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் இருந்துகடாயை இறக்கி விட வேண்டும். காரசாரமான ஆந்திரா பெப்பர் சிக்கன் ரெடி. சூடாக பரிமாறி மகிழுங்கள்.