பாஜக - திரிணாமுல்... 75 தனியார் ஜெட் 300 ஹெலிகாப்டர்கள்?!
மேற்குவங்க தேர்தல் காரணமாக அங்கு கொரோனா 2ம் அலை உச்சமடைந்துள்ளது என புகார் எழுந்துள்ளன. இதனால் கொரோனா நோயாளிகளின் விகிதம் முதல் அலையை விட அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. கொரோனா அதிகரிப்புக்கு பாஜக - திரிணாமுல் இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கிடையே, மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாகுறை இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தரவை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, ``மார்ச் 15லிருந்து, கொல்கத்தா விமான நிலையத்தில் மொத்தம் 75 தனியார் ஜெட் விமானங்களும், 300 ஹெலிகாப்டர்களும் தரையிறங்கியிருக்கின்றன. இதற்கு 100 கோடி செலவு. இதில் 92% பாஜகவும், 7% சதவிதம் திரிணாமுலும், மற்ற கட்சிகள் 1% செலவு செய்துள்ளன. இடதுசாரிகள் உபயோகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 100 கோடியை 5 மருத்துவமனைகள், 25 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கும், ஆயிரக் கணக்கிலான தடுப்பூசிகளுக்கும் பயன்படுத்தி இருக்கலாம்" என்று கூறியிருக்கிறது.
உண்மைதானே மக்கா!