அஜித்தை வீடியோ எடுத்ததால் வாழ்க்கையை தொலைத்த பெண் - சுரேஷ் சந்திராவால் தற்கொலை முயற்சி!

கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவமனை வந்த அஜித்தை ரசிகை ஒருவர் வீடியோ எடுத்த விவகாரம் தற்போது ஒரு பெண்ணின் தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான பர்ஜானா . கடந்த ஐந்தாண்டுகளாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு நடிகர் அஜித் பரிசோதனைக்காக வந்துள்ளார். தீவிர தல அஜித் ரசிகரான பர்ஜானா ஆர்கோளாறு காரணமாக அஜித்தை வீடியோ எடுத்துள்ளார். இதை கண்காணித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் செல்போனை பறித்துள்ளனர். மேலும் அவரை எச்சரித்துள்ளனர்.

மீண்டும் செல்போன் பர்ஜானாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எப்படியோ வீடியோ கசிந்து சமூக வளைத்தலங்களில் வெளியாகியுள்ளது. அதுவரை பிரச்னையில்லை. ஆனால், நடிகர் அஜித்திற்கு கொரோனோவா? என்ற கேள்விக்குறியுடன் அந்த வீடியோவை ஒரு சிலர் சமூகவலைதளத்தில் பரப்ப பர்ஜானாவை மருத்துவமனை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அஜித் மனைவி ஷாலினியின் உதவியுடன் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட பர்ஜானா மருத்துவமனை தரப்பிடமும் நடிகர் அஜித்தின் மனைவி சாலினியிடமும் மன்னிப்பு கேட்டு முறையிட்டுள்ளார். பின்னர் படிப்பு சான்றிதழ்களை தர மறுத்த மருத்துவமனை நிர்வாகம் ஃபர்ஜானாவை அலைக்கழித்துள்ளது. நடிகர் அஜித்தை தொடர்பு கொண்டு நடந்த தகவல்களை தெரிவிக்கலாம் என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தொடர்பு கொண்டுள்ளார். முதலில் அஜித்திடம் பேசி நிவாரணம் வாங்கி தருவதாக தெரிவித்த சுரேஷ்சந்திரா பிறகு முடியாது என்று மறுத்துள்ளார்.

அதனால் மனமுடைந்த பர்ஜானா சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பர்ஜானா கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ்சந்திரா மீது ஏமாற்றுதல் ,நம்பிக்கை துரோகம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

More News >>