இந்தியாவில் புதிதாக பரவும் மரபணு மாறிய கொரோனாவை தடுப்பூசி கட்டுப்படுத்துமா?
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்குகிறது. மேலும், உயிரிழப்புகளும் 2000 கடந்துள்ளது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் வைரஸ் பரவல் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“ஒரு வைரஸ் பரவும்போது தன்னை தானே மாற்றிக்கொள்ளும். அதிகமாகப் பரவுகிறது என்றால் பல முறை அது தன்னை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. இரட்டை மரபணு மாறிய வைரசில் இருந்து இந்த புதிய மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம்” ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் என்றால் மூன்று வகையான மரபணு மாற்றத்தை ஒரே வைரஸ் கொண்டிருப்பது” என்று தெரிவிக்கின்றனர்.
ஒரு வைரஸ் பரவும்போது தன்னை தானே மாற்றிக்கொள்ளும் என்றும், இரட்டை மரபணு மாறிய வைரசில் இருந்து இந்த புதிய மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம்” ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்போது மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநிலங்களில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்முறை மரபணு மாறிய வைரசில் சில வகைகள் உடலில் தோன்றும் ஆன்ட்டிபாடிகளில் இருந்து தப்பிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஏற்கனவே கொரோனா நோயாளிகளின் உடலில் இருக்கும் இயற்கையான ஆன்ட்டிபாடிகளுக்கும் இவை கட்டுப்படுவதில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.