காதல் மனைவியின் பிறந்தநாள்...நம்ம கனடா பிரதமரின் அசத்தல் வாழ்த்து!
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், அவரது மனைவிக்கு க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
உலக அளவில் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவர் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட். வெளிநாட்டவர்களுக்கு தன் நாட்டில் கொடுக்கும் சம உரிமை, அகதிகளுக்கு அடைக்களம், உலகப் பிரச்னைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வு என உலக அரசியல் பேசி பல தேசங்களின் உள்ளூர் மக்களின் இதயங்களைக் கொள்ளைக் கொண்டவர் ட்ரூட்.
இளம் தலைவரான இவரின் மனைவி சோஃபி கிரெக்கரி ட்ரூட்க்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, ட்விட்டரில் தன் மனைவிக்கு ஒரு க்யூட்டான புகைப்படத்துடன் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார் ட்ரூட்.
ஜஸ்டின், மனைவி சோஃபிக்கு காதல் முத்தம் அளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் புகைப்படத்துடனான ஒரு குறிப்பில்,`மிகச் சிறந்த மனைவிக்கும் தாய்க்கும் மனம் கணிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உன்னை என் உற்றத் தோழி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
சவால்கள் நிறைந்த மற்றுமொறு ஆண்டை உன்னுடன் சேர்ந்து பகிர்ந்துகொள்ள எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்’ என்று வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.
கனட பிரதமரின் இந்த பிறந்தநாள் வாழ்த்து ட்வீட் தற்போது சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com