பிரதமர் மோடி மீது பிரசாந்த் கிஷோர் தாக்கு
பிரதமர் மோடி தனது புரிதலின்மை மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததை மறைக்கவே தற்போதுள்ள நெருக்கடியைப் புறக்கணிப்பதாக பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
செவ்வாய்கிழமை இரவு 8:45 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பரவல் இரண்டாம் அலை நாட்டை சூறாவளிபோல தாக்கி வருவதாகவும் மக்கள் நினைத்தால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் பேசினார்.
இந்நிலையில், நாட்டின் முக்கிய தேர்தல் ஆலோசகர்களில் ஒருவரான பிரசாந்த் கிஷோர் , பிரதமர் மோடியை சாடி ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார். மோடி அரசு தற்போதுள்ள நெருக்கடியைக் கையாளும் விதம் என பிரசாந்த் கிஷோர் நான்கு விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
1.புரிதல் மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததால் சிக்கலைப் புறக்கணித்தல்.
2.திடீரென அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, வெற்றியடையப் பொய்களை கட்டவிழுத்துவிடுவது.
3.சிக்கல் தொடரும்பட்சத்தில், அதற்குக் காரணம் மற்றவர்கள்தான் என மடைமாற்றிவிடுதல்.
4.அதேநேரம் சூழ்நிலை மேம்பட்டால் ராணுவத்தின் துணையுடன் அதற்கான புகழை எடுத்துக்கொள்ளுதல்.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடியை தனது ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.