“வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை” – கைலாசா நாட்டு அதிபர் சுவாமி நித்யானந்தா
தமிழ் நடிகை ரஞ்சிதாவும், சுவாமி நித்தியானந்தாவும் நெருக்கமாக இருந்த காணொளியை 2010 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதன்பின் தமிழகத்தில் சுவாமி நித்தியானந்தாவை தெரியாதவர்களே இல்லை. இவர் மீது பல வழக்குகள் பதிவாகியுள்ளது.
ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வேகமெடுக்க, மறுபக்கம், குஜராத் ஆசிரம வழக்கு நெருக்கடி ஏற்படுத்த, போலீஸ் கையில் மாட்டாமல் நித்தியானந்தா தலைமறைவானார். நித்தியானந்தாவை போலீசார் வலைவீசி தேடிவர, அவரோ வெகு கூலாக தனது தொலைக்காட்சியில் பிரசங்கம் செய்து கொண்டு தினமும் ஒரு வீடியோவை வெளியிட்டுவந்தார்.
உலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்த தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர்.
இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக
இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா, 2019 ஆம் ஆண்டு தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக அறிவித்தார். நாட்டின் கொடி, பாஸ்போர்ட், பணம் ஆகியவை குறித்தும் இணையதளம் பக்கத்தில் வெளியிட்டார்.
யாருக்கெல்லாம் கைலாசா வர விருப்பம் உள்ளதோ அவர்கள் எல்லாம் தன்னிடம் குடிமக்களாகச் சேரலாம் என்றும், அப்படி தன் நாட்டுக்கு வந்தால் அவர்களை இலவசமாக அழைத்து செல்வதாகவும், கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, கைலாசாவில் டீ கடை வைத்து பிழைக்க விரும்புபவர்களும்கூட விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தார்.
கைலாசாவில் விவசாயம் செய்ய நிலம் வேண்டும் என்றும், டீக்கடை வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், திருமணம் செய்ய பெண் வேண்டும் என்றும் பல இளைஞர்கள் நித்தியானந்தாவிற்க கேலியாக கடிதம் எழுதி இணையதளத்தில் வெளியிட்டனர்.
இந்நிலையில் கைலாசா நாட்டு அதிபர் சுவாமி நித்தியானந்தா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.