டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
ரியல்மீ 8 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வடிவமாக ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் மூன்று காமிராக்கள் மற்றும் உள்ளார்ந்த சேமிப்புத்திறனை மெய்நிகர் ராம் ஆக மாற்றும் டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷன்(டிஆர்இ)தொழில்நுட்பமும் இதில் உள்ளது.
ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
சிம்: இரட்டை நானோ சிம்தொடுதிரை: 6.5 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல்)ரெஃப்ரஷ் விகிதாச்சாரம்: 90Hzபிரைட்னஸ்: 600 nits; டிரகான்டிரையல் கிளாஸ்இயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 8 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்தும் வசதி)செல்ஃபி காமிரா: 16 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (ரியர் டிரிபிள் காமிரா)பின்புற காமிராவில் நைட்ஸ்கேப், 48எம் மோடு, ப்ரோ மோடு, ஏஐ ஸ்கேன் மற்றும் சூப்பர் மேக்ரோ ஆகிய மென்பொருள் அம்சங்கள் இணைந்துள்ளன.மின்கலம்: 5000 mAhபாஸ்ட் சார்ஜிங்: 18W
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பக்கவாட்டில் விரல்ரேகை உணரி உள்ள ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.14,999/- விலையிலும் 8 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.16,999/- விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏப்ரல் 28ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், ரியல்மீ.காம் ஆகிய தளங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் விற்பனை தொடங்கும்.