அரசு சொல்லும் தகவலில் முரண்பாடு.. குஜராத்தில் அதிகரிக்கிறதா கொரோனா உயிரிழப்பு?!

கொரோனா 2ம் அலையில் குஜராத் மாநிலத்தின் நிலை பரிதாபத்துக்கு உள்ளாகி உள்ளது. அங்கு மருத்துவமனை மற்றும் ஆக்சிஜன், படுக்கை வசதிகள் பற்றாக்குறைகள் நிலவுகின்றன. குஜராத் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்ட அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த 33 மருத்துவமனைகளில் வெறும் 16ல் மட்டுமே சி.டி ஸ்கேன் செய்யும் வசதிகள் உண்டு. அதிலும், வெறும் 5ல் மட்டுமே MRI ஸ்கேன் செய்யும் வசதிகள் உண்டு.

கொரோனா பாதிப்புக்கு உள்ளனவர்களின் நுரையீரல் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க சி.டி.ஸ்கேன் உபகரணங்கள் மிகவும் அவசியம். ஆனால் உபகரணங்கள் பற்றாக்குறையால் குஜராத்தில் நிலைமை மோசமாகி வருகிறது.

குஜராத் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல், ஓரே பெட்டில் 3 முதல் 4 பேர் மருத்துவ சிகிச்சை எடுக்கிறார்கள். இது போக, மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் பெஞ்சில் சிகிச்சை எடுக்கும் நோயாளிகளும் உண்டு. இதேபோல், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, குஜராத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு வெளியிட்ட தினசரி கோவிட் அறிக்கையில் 78 பேர் தொற்று பாதித்து மரணம் என்றிருந்தது. ஆனால், அன்று மட்டும் 689 உடல்கள் கொரோனா வழிகாட்டுதலோடு அடக்கம் செய்யப்பட்டன என்று பிரபல நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக புகார்கள் வந்தன. அரசு இறப்பின் எண்ணிக்கையை குறைத்து வெளியிடுகிறது என்று சொல்லப்பட்டது. இப்போது பிரபல நாளேடு அதை தனது கள ஆய்வின் மூலம் சொல்லியிருக்கிறது.

More News >>