ஆக்சிஜனுக்காக மத்திய அரசின் காலில் விழக்கூட தயார் - மகாராஷ்டிரா அமைச்சர் உருக்கம்..!
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதில் மகாராஷ்டிரா மாநிலம் நோய் பரவலில் முதலாக இடத்தை பிடித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 60 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்படுவதொட்டி சுமார் 7 லட்சம் மக்கள் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய் நாளுக்கு நாள் மிக மோசமாக பரவி வரும் நிலையில் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து போன்றவை பற்றாக்குறையால் மாநிலமே என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி வருகின்றது.
இதுவரை ஆக்சிஜன் குறைப்பாட்டால் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இது போன்ற பற்றாக்குறை நீடித்து வந்தால் பல உயிர்களை இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம் என்பது 100 சதவீதம் உண்மை. இந்நிலையில் மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே மத்திய அரசுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அதாவது, ஆக்சிஜனுக்காக மகாராஷ்டிரா அரசு மத்திய அரசு காலில் விழ கூட தயாராக உள்ளதாக கூறிப்பிட்டுருந்தார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆக்சிஜன் விநியோகம் செய்ய கூடிய அதிகாரம் மத்திய அரசின் கையில் தான் உள்ளது. ஆகவே, மகாராஷ்டிரா அரசுக்கு போதிய ஆக்சிஜன் வழங்க கோரி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.