ஆக்சிஜன் தட்டுப்பாடு: கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்… குவியல் குவியலாய் எரிக்கப்படும் உடல்கள்..!

மருத்துவமனைகளில் செயற்கை ஆக்சிஜன் கிடைக்காததால் ஒவ்வொரு மணித்துளியும் கொத்துக் கொத்தாக கொரோனா நோயாளிகள் உயிரிழக்கின்றன.

கொரோனா 2 வது அலை இந்தியாவில் கொரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 3.30 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால்,கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

ஏப்ரல் 16 ஆம் தேதி நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் சுமார் 59,193 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அங்கு தினமும் 250 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

அதேபோல, குஜராத்தில் 49,737க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு தேவைப்படும் ஆக்சிஜனின் அளவு ஒரு நாளைக்கு 500 டன்களைக் கடந்துள்ளது.

டெல்லியில் பல இடங்களில் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.

போபாலில் ஆக்சிஜன் வாங்குவதற்காக வாகனங்களில் மக்கள் காத்து கிடக்கின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிலவுவதால், தேவையான ஆக்ஸிஜனை உடனே வழங்கக் கோரி மத்தியஅரசுக்கு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கொரோனா நோய் தொற்று மற்றும் சிகிச்சையின் போது ஆக்ஸிஜன் கிடைக்காமல் நாள்தோறும் உயிரிழப்பு உச்சக்கட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் மயானங்களில் சடலங்களை எரிக்க இடம் இல்லாததால், அங்கங்கே உடல்களை வைத்து எரிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.

More News >>