நிர்வாண வீடியோவை வைத்து துணை இயக்குநர் மிரட்டல்... செம்பருத்தி சீரியல் நடிகை பரபரப்பு புகார்...
துணை இயக்குநருக்கு எதிராக சின்னத்திரை நடிகை ஜெனிபர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை மணலி பல்ஜிபாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகையான ஜெனிஃபர், 'செம்பருத்தி' தொடரின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வானத்தைப் போல' தொடரில் நடித்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு சரவணன் என்பவரை திருமணம் செய்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் நடிகை ஜெனிபர் தொடரில் பணியாற்றும் உதவி இயக்குனர் நவீன் குமாருடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நவீன் குமாருக்கு வேலை பறிபோன நிலையில், சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து ஜெனிபர் உதவியதாக தெரிகிறது.
இந்நிலையில், நவீன் குமார் மீது நடிக ஜெனிபர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், நான் எனது கணவர் சரவணனை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்து விட்டேன். இந்நிலையில் நான் நடிக்கும் சீரியலில் துணை இயக்குநராக பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னுடன் நெருக்கமாக பழகினார். நான் கணவரை பிரிந்து விவாகரத்து கோரிய விஷயம் அனைத்தும் அவருக்கு தெரியும். அவர் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்கு அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். நானும் அவரிடம் நல்ல முறையில் பழகினேன்.
போகப்போக நவீன்குமார் என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்ய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை அடித்து துன்புறுத்தினார். காரில் என்னை அழைத்துச் சென்று அடித்து, உதைத்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி ஆடைகளை களைந்து வீடியோ எடுத்து சைக்கோ போல நடந்து கொண்டார்.
இதனால் நான் அவரை திருமணம் செய்ய மறுத்து அவரை விட்டு விலகினேன். என்னிடம் மீண்டும் 5 லட்சம் பணம் தரும்படி கேட்டு மிரட்டினார். என்னால் முடியாது என்றேன். இதனால் ஆத்திரமடைந்த கடந்த 17ம் தேதியன்று மணலியில் நான் என் தங்கையுடன் காரில் சென்ற போது அடியாட்களை அழைத்து வந்து என் தங்கையின் ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தினார். அது தொடர்பாக மணலி போலீசில் புகார் அளித்தேன். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, நான் அளித்த புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் நவீன்குமார் அந்தரங்க அறையில் என்னை அரை நிர்வாணமாக எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு மானத்தை வாங்கி விடுவேன் என மிரட்டுகிறார்.
ஆகவே அவர் மீதும் அவருக்கு துணையாக இருந்து என்னை மிரட்டும் அவரது தந்தை உதயகுமார், பவானி உதயகுமார், பிரவீன் குமார் ஆகியோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு நடிகை ஜெனிபர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.