ஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி!

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க வேண்டிய தினம் இன்று. ஆம்! ஐபிஎல் சீசனிலேயே மிகக் குறைவான ஸ்கோர் பதிவான தினம் இன்று. பெங்களூரு அணி ரசிகர்களுக்கு இன்று வரை கசப்பான நினைவாக உள்ள அந்தப் போட்டியை நினைவுகூறுவோம்.

இந்த முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது ஆர்சிபி. நம்ம ஆர்சிபியா இது? என்று வியந்து பார்கிறார்கள் அந்த அணியின் ரசிகர்கள். அப்படியொரு ஃபார்மில் இருக்கிறது பெங்களூரு அணி. எப்படியும் ஈ சாலா கப் நமதே என்ற முழக்கத்தை இந்த முறை உண்மையாக்கி விடுவார்களோ என்ற பயமும் மற்ற அணி ரசிகர்களுக்கு உண்டு.

இப்படியாக ஐபிஎல்லில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத பெங்களூரு அணி, மலைக்கத்தக்க பல்வேறு சாதனகளை நிகழ்த்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கெய்லின் அதிரடியான 175 ரன்கள் மூலம் ஐபிஎல்லில் அதிக பட்ச ஸ்கோரான 263 ரன்கள் என்ற சாதனையை படைத்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தினத்தில் ஐபிஎல்லில் குறைவான ஸ்கோரை ஆர்சிபி பதிவு செய்யும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட பெங்களூரு, 131 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது. கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், கோலி என நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கிய பெங்களூரு, கொல்கத்தாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 49 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

கோப்பை வெல்லாத ஏக்கத்தில் இருந்த பெங்களூரு அணி ரசிகர்களுக்கு 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன சம்பவம் கூடுதல் ரணமாக வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அமைந்தது.

More News >>