ஆக்சிஜன் சப்ளையை தடுத்தால் தூக்கு கண்பார்ம்!! டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை..

ஆக்சிஜன் சப்ளையை தடுக்க நினைக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என டெல்லி ஐகோர்டின் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நிலவுகிறது. இதைச் சரி செய்ய மத்திய அரசும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் சப்ளையை சீரமைத்து, முறையாக வழங்கக் கோரி ஏற்கெனவே டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனத்தை தெரிவித்தது. பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்கியாவது மக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு வந்து கொடுங்கள் என்று கூறி இருந்தனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள மகாராஜா அகர்சென் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருக்கும் நிலையில் அங்கு ஆக்சிஜன் தீர்ந்து போகும் நிலையில் இருக்கிறது.

இதையடுத்து, ஆக்சிஜன் சப்ளையை முறையாக வழங்கிட கோரி டெல்லி ஐகோர்ட்டில் மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து டெல்லி ஐகோர்ட் கூறியதாவது ஆக்சிஜன் சப்ளையே தடுக்கும் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் யாரையும் விட்டு வைக்க மாட்டோம். ஆக்சிஜன் சப்ளையை தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை டெல்லி அரசு எங்களிடம் உதாரணமாகக் காட்டினால் போதும் அந்த அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

More News >>