தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் தேவை.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்..!
தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்துச் செய்ய வேண்டும். தற்போதையக் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டால் தமிழகத்திற்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும்.
தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திச் செய்யும் திறன் இருக்கிறது. தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்றால், கடும் பற்றாக்குறை ஏற்படும். தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் போதுமானது என மத்திய அரசால் தவறான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜனை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.