யம்.. யம்.. குழந்தைகளுக்கு பிடித்த பால் பர்பி ரெசிபி..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பால் பர்பி எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

தேவையான பொருள்கள்:

காய்ச்சிய பால் – 1 கப்சர்க்கரை – அரை கப்சர்க்கரை இல்லாத கோவா – 250 கிராம்முந்திரிப்பருப்பு – 50 கிராம்பச்சை புட் கலர் – கால் ஸ்பூன்

செய்முறை:

பால், சர்க்கரை, கோவா ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சேர்த்து கலக்கி மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும்.

கலவை இறுகி வரும் சமயம் புட் கலரைச் சேர்க்கவும். பிறகு கலவை கெட்டியானவுடன் இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி சமமாகப் பரப்பி நெய்யில் வறுத்த முந்திரிகளை அலங்கரித்து ஆறியவுடன் டைமண்ட் வடிவத்தில் வில்லைகள் போடவும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>