மே 1 மற்றும் 2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்.. உச்சநீதிமன்றம் பரிந்துரை..!
மே 01, 02 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த செய்தி தொடர்பாகவும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை தொடர்பான செய்திகளையும் தாமாக முன்வந்து ஐகோர்ட் வழக்கு எடுத்துக்கொண்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடுப்பூசி, ரெம்டிசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும், மே 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.
ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ஏப்ரல் 28ம் தேதி வெளியிடலாம். வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், இதில் சமரசம் செய்ய கூடாது. வாக்கு எண்ணிக்கை தொடர்புடைய வாகனங்களை மட்டும் 2 நாட்களில் அனுமதிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.