மோடிக்கு சோனியாவின் அறிவுரை தேவை!- கடுப்பேற்றும் காங்கிரஸ்
அகில இந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய சிங், `இந்தியாவின் வளர்ச்சி குறித்து சோனியாவிடமே மோடி யோசனை கேட்கலாமே?’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கிறது. இதனால், அங்கு களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸுக்கும் பாஜக-வுக்கும் இடையில் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.
காங்கிரஸ் சார்பில், அதன் தலைவர் ராகுல் காந்தி திவீர சுற்றுப் பயண பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பாஜக சார்பில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் சீக்கிரமே பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் களத்தைத் தாண்டியும் இந்த காரசார விவாதம் நின்றதாகத் தெரியவில்லை. குறிப்பாக, காங்கிரஸின் பெரிய தலைவர்கள் பலர் பாஜக-வின் நான்கு ஆண்டு கால ஆட்சியை சமூக வலைதளங்களில் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய சிங், `இந்தியாவின் மனித வளக் குறியீட்டை எப்படி அதிகமாக்குவது என்பது குறித்து மோடி ஜி, சோனியா ஜி-யிடம் கருத்து கேட்கலாம். அதனால் என்னத் தவறு இருக்கிறது. ஆனால், அவர் கேட்கமாட்டார். மோடிக்கு தலைக்கணம் மிக அதிகம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com