7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள நெட்ஃபிளிக்ஸ் படங்கள்!
உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய, கௌரவ விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி மாதம் நடப்பட வேண்டிய இந்த விழா கால தாமதமானது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.
உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்தது. இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டன.
இதற்கிடையே, ஆஸ்கர் விருதுக்கு நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியான 17 படங்கள் 36 விருதுகளுக்கு நேரடியாக பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் 7 படங்கள் ஆஸ்கர் விருதுகளை வென்றன. இதற்கு முன்னதாக, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான 8 படங்கள் ஆஸ்கர் விருதுகளை வென்ற குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் போலவே டிஸ்னி ஓடிடி தளம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
ஆஸ்கர் விருதை வென்ற நெட்ஃபிளிக்ஸ் படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் இங்கே:
* சிறந்த ஒளிப்பதிவாளர் - எரிக் மெசர்ச்மிட் (மங்க்)
* சிறந்த கலை இயக்கம் - மங்க்
* சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
* சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்
* சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்
* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)
* ஆடை வடிவமைப்பு - அன் ரோத் (பிளாக் பாட்டம்)