தாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 66 வயதான மரியா சோலேடாட் கோமெஸ் கடந்த திடீரென மாயமாகியுள்ளார். மரியா சோலேடாட் கோமெஸ் மாயம் குறித்து அவரது நண்பர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று மரியாவின் மகன் அல்பர்டோவிடம் விசாரித்துள்ளனர்.
அதற்கு அவர், “மரியா இறந்துவிட்டார். நானும் என் வளர்ப்பு நாயும் அவரது உடலை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டோம்” எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், வீட்டிற்குள் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது படுக்கை அறையில் மரியாவின் உடல் துண்டுதுண்டுகளாக இருந்துள்ளது. அந்த அறை முழுவதும் மரியாவின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்துள்ளன. அவற்றில் சில பாகங்கள் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. சமையல் அறையில் இருந்த ஃபிரிட்ஜில் சில உடல் பாகங்களும் இருந்துள்ளது .
இதையடுத்த அல்பர்டோவை போலீசார் கைது செய்து. காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, “சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் அவரை கழுத்து நெறித்துக் கொலை செய்தேன். உடலை பெட்ரூம் கொண்டு சென்று துண்டு துண்டுகளாக்கினேன். சில உடல் பாகங்களை நாய்க்கு உணவாக கொடுத்தேன். நானும் கொஞ்சம் சாப்பிட்டேன்” என கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை ஸ்பெயின் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் என் அம்மாவை கொலை செய்யும் படி பல குரல்கள் தொலைக்காட்சி வாயிலாக என்னிடம் சொல்லியது, அவை நண்பர்கள், பிரபலங்கள், பக்கத்துவீட்டுக்காரர்களின் குரல்களாக இருந்தது. தாயை தாக்கியதும் அவரை கொலை செய்ததும், அந்த உடலை உட்கொண்டதும் தனக்கு நினைவில் இல்லை என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
ஆல்பர்டோ போதை பழக்கத்துக்கு அடிமையாகி அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை மனநலம் பரிசோதனைக்கு உட்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.