கொரோனா எதிரொலி..! தமிழகத்தில் சனிக்கிழமையும் இறைச்சி, மீன் கடைகளுக்கு லீவ்..
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமையும் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமலில் இருக்கும் நிலையில் சனிக்கிழமையும் இறைச்சி வாங்க இயலாது. தடையை மீறி இறைச்சி விற்பனை கடைகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஞாயிறு பொதுமுடக்கத்தால் சனிக்கிழமை இறைச்சி, மீன் கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் குவிவதால் சனிக்கிழமையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று இறைச்சிக் கடைகள், மீன் மார்க்கெட்டுகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.