நடிகர் விவேக்கின் கடைசி அஸ்தியை அவரது உறவினர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா??
மறைந்த விவேக்கின் சாம்பலை அவரது குடும்பத்தினர்கள் சொந்த ஊரான மண்ணில் புதைத்து அதன் மேல் ஒரு மரக்கன்றை நட்டுள்ள நிகழ்வு அனைவரின் மனதை உருக்கியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடிக்கு என்றே பெயர்போன பெருமை நடிகர் விவேக்கையே சாரும். இவரது காமெடிகளில் அனைவரையும் சிரிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைக்கும் என்பது யாவரும் அறிந்த உண்மையே.
இவர் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்னாள் வரை மிகவும் ஆக்டீவாக, சுறுசுறுப்பாக இருந்தாரே என அவரது மறைவை கேட்ட அனைவருமே இப்படி தான் யோசித்தார்கள். இவர் இறந்த முன் நாள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் விவேக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் செலுத்தி கொண்ட தடுப்பூசிக்கும் மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மரக்கன்று நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மறைந்த நடிகர் விவேக் அவர்களின் சாம்பலை அவரது சொந்த ஊரான மதுரையில் உள்ள பெருங்கூதூரில் பூஜை செய்துள்ளனர். அதன்பிறகு அதை மண்ணில் போட்டு அதற்கு மேல் ஒரு மரக்கன்று நட்டுள்ளார்கள். அவர்கள் செய்த விஷயம் வெளியாக மக்கள் இதைவிட அவரது ஆன்மாவிற்கு சாந்தி தரும் விஷயம் எதுவும் இருக்காது என கூறி வருகின்றனர்.