இறுகும் ஹெச்1பி விசா நடைமுறை...லைஃப் பாட்னர்களுக்கு கெட்-அவுட்!

ஹெச்1பி விசா நடைமுறைகள் மேலும் இறுக்கமாவது அமெரிக்கவாழ் இந்தியர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

ஹெச்1பி விசா நிர்வாக நடைமுறையில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் விதிமுறைகளால் இந்தியர்களுக்கே அதிக சிக்கல்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஹெச்1பி விசா மூலம் ஐடி ஊழியர்களே அதிகளவில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பின்னர் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சூழல் இறுக்கமாகியுள்ளது.

அதாவது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கான ஹெச்4 விசா நடைமுறைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அமெரிக்காவில் பணியாற்றுவோரின் துணைகளுக்கு வழங்கப்படும் விசா தரப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒபாமா அதிபராக இருந்தபோது ஹெச்1பி விசா நடைமுறைகளுக்காக கொண்டுவரப்பட்ட அனைத்து நடைமுறைகளும் தற்போது மறுபரிசீலனை செய்யப்படவுள்ளது. இதனால் ஹெச்1பி விசா மூலம் அதிகம் பயனடையும் இந்தியர்களுக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More News >>