கவலை கொள்ள வேண்டாம்!.. வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த உத்தரவாதம்

நடப்பு ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகினார். கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித்தார். இதேபோல், ஆர்சிபி அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சார்ட்ஸன் கொரோனா சூழல் காரணமாக விலகினர். இதனால் மற்ற வெளிநாட்டு வீரர்கள், மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக அவர்கள் தங்கள் எப்படி நாடு திரும்புவது என்பது குறித்து கவலை தெரிவித்தனர். இதையடுத்து இன்று பிசிசிஐ, ``நிறைய வீரர்களுக்கு, `எப்படி வீட்டுக்கு திரும்புவது என்ற அச்சம் இருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். உங்களின் இந்த உணர்வு இயல்பானது. நாங்கள் சொல்லிக்கொள்வது நீங்கள் இந்த விஷயத்தில் கவலை கொள்ள வேண்டாம் என்பதே.

வீரர்கள் வீடு திரும்புவதை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும். இதை உத்தரவாதமாக நாங்கள் தருகிறோம். அரசுகளுடன் இணைந்து உங்களை அழைத்துச் செல்ல தேவைப்படும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்" எனக் கூறியுள்ளது.

More News >>