இறுதி ஓவரில் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி

பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

IPL தொடரின் 22 வது போட்டியில் டெல்லி அணி மற்றும் பெங்களூரு அணி மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக விராட் கோலி மறும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். கோலி 12 ரன்களிலும், படிக்கல் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஏ.பி.டி வில்லியர்ஸ் பெங்களூ அணியின் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 42 பந்துகளுக்கு 75 ரன்களைக் குவித்தார். அதன்மூலம் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவன் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தவன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். 12.4 ஓவரில் 93 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து டெல்லி அணி தடுமாறியது. அடுத்து வந்த ஹெட்மயர் தடுமாறிய டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 19 வது ஓவரில் பண்ட்டும், ஹெட்மெயரும் இணைந்து 11 ரன்கள் எடுத்தனர். அதன்மூலம், 19-வது ஓவரில் 158 ரன்களை எட்டியது டெல்லி அணி.

இறுதி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிராஜ் இறுதி ஓவரை வீசினார். முதல் 3 பந்துகளில் 2 ரன்களைக் கொடுத்தார். 4 வது பந்தில் இரண்டு ரன்களை எடுத்தார் பண்ட். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பன்ட் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை மட்டுமே எடுத்தார். அதன்மூலம் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் டெல்லி அணி தோல்வியடைந்தது.

More News >>