இந்தியாவில் 85% பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லக் கூடாதா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு இறந்தவர்களின் எண்ணிக்கை வினாடிக்கு வினாடி அதிகரிப்பால் மயானங்களும் நிரம்பி வழிந்து வருகிறது. டோக்கன் முறையில் சடலங்களை வைத்து கொண்டு நாட்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். டெல்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகவலைதளங்கள் மூலமும், செய்திதாள் வழியாகவும் உதவி கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தாக்கிய 15 சதவீதம் பேருக்குத்தான் சிகிச்சை தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிததுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜாசரெவிக்,

“இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுகிறது. இதிலும் குறைவானவர்களுக்குத்தான் ஆக்சிஜன் அவசியமாகிறது. ஆனால் தற்போது பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்று பார்த்தால், சரியான தகவல்கள், ஆலோசனைகள் கிடைக்காததின் விளைவாக பலர் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு வீட்டில் இருந்து கொண்டு பராமரித்து, கண்காணித்து வந்தாலே கொரோனாவை பாதுகாப்பாக நிர்வகிக்க முடியும். சமூக அளவிலான மையங்கள் நோயாளிகளை சோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பான வீட்டு பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதே நேரத்தில் ஹாட்லைன் மற்றும் டேஷ்போர்டுகள் மூலம் தகவல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்”. என்று தாரிக் ஜாசரெவிக் தெரிவித்துள்ளார்.

More News >>