பிரதமர் மோடியின் உறவினருக்கே இந்த நிலையா? - பலரும் இரங்கல்!

குஜராத் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபெண் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலையின் வீரியம், இந்தியாவை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. போக போக இன்னும் மோசமான நிலையை இந்தியா அடையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மயானங்கள் பற்றாக்குறை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இந்த துயரை துடைக்க நாங்கள் உதவுகிறோம் என உலக நாடுகள் உதவிக்கரம்நீட்ட முன்வந்துள்ளனர். மேலும் அந்தந்த மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்ததும், ஏற்கெனவே உள்ள கட்டுபாடுகளை தீவிரமாக்கியும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமரின் சித்தி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபெண் மோடி கணவரை இழந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் குஜராத் மாநிலம் அலகாபாத்தில் வசித்து வந்தார்.

இவரது வயது 80. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதரதாஸின் சகோதரர் ஜெகஜீவன் தாஸின் மனைவியாவார். நரேந்திர மோடிக்கு சித்தி முறையாவார்.கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அலகாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நர்மதாபெண் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பிரதமர் மோடியின் நர்மதாபென் மோடி மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News >>