குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
நாக்ஸ் (knox)செக்யூரிட்டி மற்றும் வாட்டர்டிராப்-ஸ்டைல் நாட் அப் முகம் கொண்டதாக சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. என்எஃப்சி காண்டாக்ட்லஸ் சாம்சங் பே செயல்படும் வசதி இதில் உள்ளது. மே மாதம் 1ம் தேதி முதல் அமேசான்.இன், சாம்சங்.காம் மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி விற்பனையாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.6 அங்குலம் எச்டி+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யூ டிஸ்ப்ளேஇயக்கவேகம்: 6 ஜிபி மற்றும் 8 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்தலாம்)முன்புற காமிரா: 20 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 48 எம்பி + 8 எம்பி + 5 எம்பி + 5 எம்பி குவாட் காமிரா(சிங்கிள் டேக், நைட் மோடு, ஹைபர்லாப்ஸ், சூப்பர்-ஸ்லோ மோஷன், சீன் ஆப்டிமைசர், ஃப்லா டிடெக்சன் ஆகிய தொழில்நுட்பங்கள் கொண்டது)பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 750ஜி SoCஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; ஒன் யூஐ 3.1மின்கலம்: 5000 mAhசார்ஜிங்: 15W பாஸ்ட் சார்ஜிங்
6 ஜிபி + 128 ஜிபி கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.21,999/- விலையும், 8 ஜிபி + 128 ஜிபி போனுக்கு ரூ.23,999/- விலையும் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மே மாதத்தில் அறிமுக சலுகையாக முறையே ரூ.19,999/- மற்றும் ரூ.21,999/- விலைக்குக் கிடைக்கும்.