பிக் பாஸ் சாண்டியின் மனைவி 2வது முறையாக கர்ப்பம்.. குஷியில் ரசிகர்கள்..!
பிக் பாஸ் சாண்டியின் மனைவிக்கு வீட்டிலே நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகின்றது. சின்னத்திரையில் டான்ஸ் மாஸ்டராக ரசிகர்களை கவர்த்து அதன் பின் சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி மாஸ்டர்.அவருக்கு அதிக அளவு ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.
சாண்டி மாஸ்டர் அந்த சீசனில் இறுதி வரை இருந்து இரண்டாம் இடம் பிடித்தார் என்பதும் அனைவருக்கும் நினைவிருக்கும். பிக் பாஸில் சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் குழந்தை லாலா ஆகியோரும் அதிகம் பிரபலம் ஆனார்கள். பிக் பாஸுக்கு பிறகு சினிமாவில் பிரபலம் ஆன சாண்டி பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சாண்டியின் மனைவி சில்வியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தற்போது இரண்டாவது குழந்தைக்காக சாண்டி மற்றும் குடும்பம் காத்திருக்கிறது. சமீபத்தில் சில்வியாவுக்கு வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அதன் புகைப்படங்களை சில்வியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி உள்ளன. ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.