18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு... முதல்நாளே சிக்கல்!

கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்க தொடங்கியதால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது.

இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. ஏற்கனவே, கோவின் இணையதளம் மற்றும் ஆரோக்கிய சேது செயலிகள் மூலம் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மற்றும் செயலி மூலம் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களை கண்டறிந்து, முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதன்படி இன்று முதல் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில், முன்பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. முன்பதிவு செய்ய தொடங்கிய பலருக்கும் OTP எண் தாமதமாக வருகிறது. அதேபோல் பல இடங்களில் கோவின் இணையதளமே முடங்கி விட்டது. ஒரே நேரத்தில் அனைவரும் முன்பதிவு செய்ய முற்பட்டதன் விளைவே இப்படி சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம், நேரம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

More News >>