குடும்பத்தில் விஷேஷம் நடக்க இருந்த நிலையில் உயிரிழந்த விவேக்.. சோகம் தரும் பின்னணி!

தமிழ் திரையுலகில் காமெடிக்கு என்றே பெயர்போன பெருமை நடிகர் விவேக்கையே சாரும். இவரது காமெடிகளில் அனைவரையும் சிரிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைக்கும் என்பது யாவரும் அறிந்த உண்மையே. இவர் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்னாள் வரை மிகவும் ஆக்டீவாக, சுறுசுறுப்பாக இருந்தாரே என அவரது மறைவை கேட்ட அனைவருமே இப்படி தான் யோசித்தார்கள்.

இந்நிலையில் விவேக் மகன் சில வருடங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்துவிட்டார். இதையடுத்து அவரின் இரு மகள்கள் மட்டுமே உலகம் என்று வாழ்ந்து வந்தார். விவேக்கிற்கு அமிர்தனந்தினி மற்றும் தேஜஸ்வினி எனும் இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் அமிர்தனந்தினி ஆர்கிடெக்காகவும், இளைய மகளான தேஜஸ்வினி வங்கியிலும் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே, விவேக் இறக்கும் முன்பே, மூத்த மகள் அமிர்தனந்தினிக்கு திருமண வரன் பார்த்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. தொண்டு செய்து வரும் பிரபல தொழிலதிபரை மாப்பிள்ளையாக பார்த்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் அவர்கள் வீட்டில் திருமண உற்சாகம் கைகூட இருந்த நிலையில் விவேக்கின் உயிரிழப்பு அந்த குடும்பத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த நிலையில் மறைந்த நடிகர் விவேக் அவர்களின் சாம்பலை அவரது சொந்த ஊரான மதுரை அருகே உள்ள பெருங்கூதூரில் பூஜை செய்துள்ளனர். அதன்பிறகு அதை மண்ணில் போட்டு அதற்கு மேல் ஒரு மரக்கன்று நட்டுள்ளார்கள். அவர்கள் செய்த விஷயம் வெளியாக மக்கள் இதைவிட அவரது ஆன்மாவிற்கு சாந்தி தரும் விஷயம் எதுவும் இருக்காது என கூறி வருகின்றனர்.

More News >>