இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்க முன்னாள் நடிகை மேகன் மார்க்லே இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. தங்கள் நிச்சயதார்த்ததன்று, ஹாரி, தன் தாயார் டயானாவை நினைவுகூரும் வண்ணம் அவரது இரு வைரக்கற்கள் பதித்த மோதிரங்களை மேகன்னுக்கு கொடுத்திருந்தார்.
ஆகவே, திருமணத்தன்றும் கண்டிப்பாக டயானாவின் ஏதாவது ஒரு நகையை மேகன் அணிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரியின் அண்ணன் வில்லியம், தமது திருமணத்திற்கு முன்பாக, எதிர்கால மனைவி கேட்டி மிடில்டனுக்கு தம் தாயாரின் நிச்சயதார்த்த மோதிரத்தை கொடுத்துவிட்டார்.
ஆகவே, ஹாரி - மேக்ஹான் மார்க்லே திருமணத்தின்போது, மணமகள் என்ன நகையை அணிந்து கொள்வார் என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு பேசிக்கொள்கிறார்கள். டயானாவின் ஸ்பென்ஸர் டியாரா என்னும் கிரீடத்தை மணமகள் சூடிக்கொள்வார் என்று அரச குடும்ப விவகார வல்லுநர் கேட்டி நிக்கோல் கருதுகிறார்.
வேறு சிலரோ தென்கடல் முத்து கம்மல்களை அணிவார் என்கின்றனர். இன்னும் சிலர் ஓமன் சுல்தான், டயானாவுக்கு பரிசாக அளித்த நெக்லஸ், கம்மல்கள், பிரேஸ்லெட் அடங்கிய சபையர் சூட் மற்றும் வைரத்தை மணமகள் தேர்ந்தெடுப்பார் என்று கூறுகின்றனர். அரச குடும்பத்தின் திருமணத்தை குறித்து எதிர்பார்ப்புகள் இருப்பது இயற்கைதானே!