மாணவர்களே..சுற்றுலா துறையில் எம்பிஏ, பிபிஏ படிப்புக்கு அறிவிப்பு

சுற்றுலா துறையில் எம்பிஏ, பிபிஏ படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கி உள்ளது.

மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம் சார்பில் இதுதொடர்பாக செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில், “ சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை படிப்புகளாக எம்பிஏ படிப்பிற்கு இந்த கல்வி ஆண்டில் எந்த படிப்பிலும் பட்டம் பெற்று 50 சதவீத மதிப்பெண் கொண்டவர்கள், பிபிஏ படிப்பிற்கு 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும், இதுபற்றிய தகவல்களை அறிய www.iitmsouth.org என்ற இணையதள முகவரியிலும் மற்றும் 9866274850 என்ற தொலைபேசியிலும் தகவல்களை அறியலாம். விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 15.5.2018 ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>