மிஸ்டர் இந்தியா ஜெகதீஷ் லாட் உயிரை பறித்த கொரோனா – சோகத்தில் குடும்பம்!
இந்திய ஆணழகன் பட்டத்தை வென்ற ஜெகதீஷ் லாட் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. தேசியளவில் தினமும் சுமார் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா 2வது அலை மிகத்தீவிரமாக உள்ள நிலையில், இந்திய ஆணழகன் ஜெகதீஷ் லட் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். மகாராஷ்டிராவை பூர்விகமாக கொண்டவர் பாடி பில்டர் ஜெகதீஷ் லாட் (34).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத் மாநிலம் வடோதராவுக்கு குடிபெயர்ந்த அவர் அங்கு ஜிம் ஒன்றை நடத்தி வந்தார். ஜெதீஷ் லாட் பாடி பில்டிங் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கங்கள் பலவும், மிஸ்டர் இந்தியா போட்டியில் தங்க பதக்கமும் வென்றுள்ளார். மேலும் இந்தியாவின் சார்பில் பல சர்வேதச போட்டிகளில் கலந்துகொண்டு நாட்டிற்கு பெருமை சேர்த்து வந்தார் ஜெகதீஷ் லாட்.
2 முறை இந்திய ஆணழகன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 4 நாட்களாக வடோதரா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா உறுதியானதால் அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றூவருகின்றனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் லட் உயிரிழந்தார். கொரோனாவிற்கு இந்திய ஆணழகன் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.