``அது கஷ்டமாக இருந்தது - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!

இந்திய அணி வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. இதனை அஸ்வின் மனைவி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளரும், சமயங்களில் அணியை சரிவிலிருந்து மீட்கும் பேட்ஸ்மேன் அஸ்வின். 34 வயதான அஸ்வினை பொறுத்தவரை, அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சென்னையை பூர்வீகமாக கொண்ட அஸ்வின், நடப்பு ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு, `நான் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறேன். கொரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுகிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட தகவலின்படி, ``எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா நோய் மிகவும் தனிமையில் இருக்கக்கூடிய ஒன்றாகும். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் விலகியுள்ளனர். சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஐபிஎல் போட்டிகள் தேவையா என்ற விவாதமும் ஒருபுறம் எழுந்துள்ளது.

More News >>