அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!

நடிகர் அஜித்துக்கு சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அவரை அஜித் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் அஜித், ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி அப்டேட் வெளியிடப்படும் என தகவல் பரவியது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, மக்கள் சோகத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில் அப்டேட் வெளியிடப்படமாட்டாது என படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இருந்தபோதிலும், ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டு, இன்று நடிகர் அஜித்தின் 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்துகளால் சமூக வலைத்தளம் திக்குமுக்காடி போயுள்ளது. விஜய் ரசிகர்கள் பலரும் கூட, அஜித் கையில் விஜய் கடிகாரம் மாட்டி விடும் காட்சியை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏகன் படத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்றை மையப்படுத்தி அஜித்தின் உழைப்புடன் தொடர்பு படுத்தி சிவகாரத்திகேயன் வாழ்த்தியிருப்பதற்கு அஜித் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.சிவகார்த்திகேயன் ஏகன் படத்தில் நடித்தது நம்மில் பலரும் அறியாத ஒன்று.

More News >>