“தடுப்பூசி எங்கடா டேய்…?” – நடிகர் சித்தார்த் சரமாரி கேள்வி…!
தடுப்பூசி குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் சித்தார்த், அண்மையில், உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பொய் சொன்னால் அறை விழும் என பரபரப்பு ட்வீட் செய்தார்.
இந்நிலையில், மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு கூறியது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 3 வாரங்கள் தாமதம் ஆகலாம் என மாநில அரசுகள் கூறுகின்றன. இதைக் குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் அடுத்தடுத்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “இந்த வருடத்தின் இறுதியில் கொரோனாவுக்கு எதிரான மாத்திரைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையிலேயே இது வரவேற்கத்தக்க ஒன்று. இருப்பினும் நாம் அனைவரும் தடுப்பூசியை விரைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தடுப்பூசிகளே இல்லாமல் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்வது? தடுப்பூசிகளை எங்கே?"
“தேசிய அளவில் மருந்துகளைப் பாதுகாத்து, அவற்றை சரியாக விநியோகிப்பதைக் கண்காணிக்கும் அதிகாரப்பூர்வ கட்டுப்பாட்டு அறை இருப்பதற்கான தகவல் இல்லை. இது பைத்தியக்காரத்தனமானது. மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு தேவைப்படுகிறது, எவ்வளவு கையிருப்பு இருக்கிறது என்பதை ஆலோசிக்க வேண்டும். நம் நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு சரிந்துவிடவில்லை. சொல்லப்போனால் முன்பை விட அதிகரித்திருக்கிறது. ஆனால் முறையற்ற நிர்வாகத்தால் அது எளிதில் சரிந்துவிடும்”.
“பேராசையையும் குறுகிய எண்ணமும் கொண்ட தலைவர்களால் அது சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலைமை இதை விடவும் மோசமாக செல்லப்போகிறது. கோபப்படுங்கள். மறக்காதீர்கள். ஆனால் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்”.
“தடுப்பூசி எங்கடா டேய்” என்று பதிவிட்டுள்ளார்.