கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே N.R.மொகல்லா பகுதியில் வசிப்பவர் ரூபா. இவர், கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக தனது கணவருடன் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அங்கு ஊரடங்கு இருப்பதால் இருவரும் நடந்தே சென்றுள்ளனர்.

பொது மக்கள் யாரும் இன்றி வெறிசோடி கிடந்த சாலையில் இவர்கள் இருவரும் மட்டும் தனியாக பேசிக்கொண்டே வந்துள்ளனர். அப்போது ரூபாவின் கழுத்தில் தங்க செயின் கிடப்பதை பார்த்த இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்றுள்ளனர். ரூபா சற்று சுதாரிப்பதற்குள் அவர்கள் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.

.85 கிராம் தங்க செயினை பறிகொடுத்த ரூபா நடுரோட்டில் கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால் சாலை வெறிச்சோடி கிடந்ததால் அவருக்கு உதவு யாரும் வரவில்லை. கணவர் மட்டும் இருசக்கர வாகனத்திற்கு பின் துரத்தி சென்றுள்ளார். ஆனால் அவர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதால் அவர்களை பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, அவர்கள் அங்குள்ள N.R..மொகல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செயின் பறிப்பு நடந்த பகுதிக்கு சென்று, அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு, மர்மநபர்களை N.R..மொகல்லா காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

More News >>