தமிழக தேர்தல்: அமைச்சர்கள் முன்னிலை, பின்னடைவு நிலவரம்

தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி நெருங்கிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறது. ஆளும் அதிமுக அரசின் முக்கிய அமைச்சர்கள் பலர் முதற்கட்ட எண்ணிக்கையில் பின் தங்கி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி அமைச்சர்கள் முன்னிலை விவரங்கள்:

எடப்பாடி தொகுதியில் முதல் அமைச்சர் பழனிசாமி முன்னிலை பெற்றுள்ளார். போடி நாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.பன்னீர்செல்வம் முன்னிலை பெற்றுள்ளார். கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை பெற்றிருக்கிறார். அவரையடுத்து அமமுகவின் டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் இருக்கிறார். ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் வி.சரோஜா முன்னிலையில் இருக்கிறார்.

சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயகுமார் பின்னடைவை சந்தித்துள்ளார். மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் பின்னடைந்துள்ளார். விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம் பின்தங்கியுள்ளார். கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பின்தங்கியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவை சந்திக்கிறார்.

More News >>