திமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…?

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக சட்டசப்பேரவைத் தேர்தல் முடிவில் திமுக கூட்டணி கட்சி பெரும்மான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் தனது வெற்றிச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் வெற்றிச்சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. 1996-க்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. முதன் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் அமரப்போகிறார்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். கருணாநிதி வழியில் ஆட்சி நடத்துவோம் என்றும், வாக்களிக்க தவறியவர்களுக்கும் பணியாற்றுவோம் என அவர் தெரிவித்தார். பதவியேற்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும் என்றும், ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா ஆடம்பர விழாவாக இல்லாமல் மிகவும் எளிமையாகவே இருக்கும் என தெரிவித்தார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையிலேயே தனது பதவியேற்பு விழா நடைபெறும். பதவியேற்பு விழாவிற்கான தேதியை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அறிவிப்போம் என்றார்.

நாளை நடைபெறும் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் திமுக அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன பொறுப்பு என அறிவிக்கப்படவுள்ளது.

More News >>